உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க.,வினர் அன்னதானம்

இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க.,வினர் அன்னதானம்

சேலம் : அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சின், 70வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர அ.தி.மு.க., சார்பில் ஜாகீர்அம்மாபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபி ேஷகம், பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள், அன்னதானம் வழங்கினர். அங்கிருந்து பிரசாதம், சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று, நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு சென்று, இ.பி.எஸ்.,சிடம் பிறந்தநாள் பரிசுகளை வழங்கினர். மதியம் சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், இ.பி.எஸ்., பெயரில் சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. பின் கட்சி நிர்வாகிகள் தங்கத்தேரை இழுத்து அம்மனை வழிபட்டனர்.இதில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், பகுதி செயலர்கள் சரவணன், முருகன், வக்கீல்கள் பிரிவு மாநில துணை செயலர் சரவணன், மீனவரணி செயலர் ராமசாமி, இலக்கிய அணி செயலர் சாம்ராஜ், வார்டு செயலர்கள் ராஜேந்திரன், வசந்தகுமார், ராஜ்கமல், குபேந்திரன், நாகராஜ், ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலர் சங்கர், இளைஞரணி செயலர் ராஜேஷ்கண்ணன், மாணவரணி செயலர் மெய்வண்ணன், தொழில்நுட்ப பிரிவு செயலர் கிருஷ்ணகுமார், பாசறை செயலர் பவித்ரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சேவல் தானம்

அதேபோல் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது மூலவர், 146 அடி உயர முருகன் சுவாமி முன், '2026ல், அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைத்து, இ.பி.எஸ்., முதல்வராக வேண்டும்' என வழிபாடு செய்தனர். பின் முருகன் சுவாமிக்கு சேவலை, தானமாக வழங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ