உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்

ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, பண்ணவாடியில் இருந்து காவிரியாற்றின் மறுகரையில் உள்ள தர்மபுரி மாவட்டம் நாகமறைக்கு பயணியர் விசைப்படகு இயக்கப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் இருந்தால்தான் விசைப்படகு இயக்க முடியும். தற்போது அணை நீர்மட்டம், 39.75 அடியாகத்தான் உள்ளது. இதனால் காவிரியாற்றின் அகலம் குறைந்து பண்ணவாடியில் ஓடை போல் காவிரி மாறியுள்ளது. இதனால் இரு வாரங்களாக விசைப்படகு இயக்க முடியாத நிலையில், இரு கரைக்கும் பரிசல்தான் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ