விமான சேவை ரத்து பயணியர் ஏமாற்றம்
ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சி, பெங்களூருக்கு, அலையன்ஸ் ஏர் விமானமும், ஐதராபாத், பெங்களூரு, சென்னை பகுதிகளுக்கு, 'இண்டிகோ' விமான நிறுவனமும், பயணியர் சேவையை இயக்கி வருகின்றன.நேற்று கொச்சியில் இருந்து புறப்பட வேண்டிய விமானம், மதியம், 2:00 மணிக்கு சேலம் வந்து பெங்களூருக்கு செல்ல வேண்டும்.ஆனால் தொழில்நுட்ப கோளாறால், கொச்சியில் இருந்து புறப்-படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லவிருந்த பயணியர் ஏமாற்றம் அடைந்து திரும்-பிச்சென்றனர்.