உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நண்பர்களாக இருந்து பிரிந்த ரவுடிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

நண்பர்களாக இருந்து பிரிந்த ரவுடிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ஓமலுார்,:சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே காமலாபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 24. இவர் மீது திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகள் உள்ள நிலையில், ரவுடி பட்டியலில் உள்ளார். பொட்டியபுரம், ஆசாரிப்பட்டறை, அண்ணா நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். 22. நண்பர்களான இருவரும் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், இவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு எதிரிகளாக மாறியுள்ளனர்.நேற்றுமுன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு பன்னீர்செல்வம் வீட்டு கதவு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில், கதவு தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததும், ஹெல்மெட் அணிந்திருந்த சிலர் பைக்கில் தப்பியுள்ளனர்.அதேபோல் அதிகாலைஅண்ணா நகரில் உள்ள விஸ்வநாதன் வீட்டின் மீதும் ஒரு கும்பல் வீட்டு சுவர், கதவு, வாசல் ஆகிய இடங்கள் என, மூன்று குண்டுகளை வீசியுள்ளனர். தொடர்ந்து, அந்த கும்பல், விஸ்வநாதனின் அண்ணன் சுரேைஷ தாக்கியுள்ளனர். அப்போது விஸ்வநாதன் எங்கே என கேட்டதாக, சுரேஷ் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால், இரு கிராம மக்களும் அச்சமடைந்து பதற்றத்தில் உள்ளனர்.நேற்று காலை ஓமலூர் இன்ஸ்பெக்டர் லோகநாதன், தடய அறிவியல்நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து, வெடித்த பெட்ரோல் குண்டு துகள்கள், எரிந்த பகுதிகள், சுவரில் இருந்த புகை, துகள்கள் ஆகியவற்றை சேகரித்துச்சென்றனர். முதல்கட்ட விசாரணையில் பெட்ரோல்,மண்ணெண்ணெய் இரண்டும் கலந்து பாட்டிலில் வீசியது தெரியவந்தது.இருவரும், ஒருவருக்கொருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டனரா அல்லது வேறு கும்பலா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ