உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையை சீரமைக்கக்கோரி மறியல்

சாலையை சீரமைக்கக்கோரி மறியல்

கெங்கவல்லி, கெங்கவல்லி பஸ் ஸ்டாப் பகுதி வழியே செல்லும் சாலையில், பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன. அச்சாலையை சீரமைக்காமல், நேற்று, 110 மீ.,ல், வேகத்தடை அமைத்தனர். ஆனால் அதன் முன் பகுதி சாலை பள்ளமாக உள்ளதாகவும், அங்கு, 20 குடங்களில் தண்ணீர் ஊற்றி பாதிப்பு குறித்து, அப்பகுதி மக்கள் எடுத்துரைத்தனர். இதனால் சாலையை சீரமைக்க, மக்கள் வலியுறுத்தினர்.தொடர்ந்து கெங்கவல்லி வணிகர் சங்க தலைவர் முருகன் தலைமையில் அப்பகுதியினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். கெங்கவல்லி போலீசார், பேச்சு நடத்தினர். நெடுஞ்சாலைத்துறையினர், சாலை முழுதும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். பின் மக்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை