உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் கார் நிறுவன ஊழியர் மீது போக்சோ

சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் கார் நிறுவன ஊழியர் மீது போக்சோ

ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. இவர் அருகே உள்ள கோவிலுக்கு சென்று வந்த நிலையில், ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 27, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர், பி.ஏ., படித்துவிட்டு ஆத்துாரில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.கடந்த, 12ல் இருவரும், இரு வீட்டினருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் இருந்தனர். சில நாட்களுக்கு முன் சிறுமி அம்மை நோயால் பாதிக்கப்பட, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர். மருத்துவர் பரிசோதனையில் சிறுமி, 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார், மணிகண்டன் மீது குழந்தை திருமணம், போக்சோ வழக்குகள் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ