உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் 11ல் ஆம்புலன்ஸ் டிரைவர் மருத்துவ உதவியாளருக்கு ஆளெடுப்பு

வரும் 11ல் ஆம்புலன்ஸ் டிரைவர் மருத்துவ உதவியாளருக்கு ஆளெடுப்பு

ஓமலுார்: வரும், 11ல் ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து, '108' அவசரகால ஆம்புலன்ஸின் சேலம் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு அறிக்கை:வரும், 11ல், சேலம், அம்மாபேட்டை அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, '108' அவசரகால ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.டிரைவர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அன்று, 24 முதல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இருபாலரும் பங்கேற்கலாம். உயரம், 162.5 செ.மீ., குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம், 3 ஆண்டுகள், பேஜ் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம், 15,820 ரூபாய் வழங்கப்படும். எழுத்து, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கு தேர்வு நடத்தப்படும்.அதேபோல் மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி., செவிலியர் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி.,(பிளஸ் 2க்கு பின் இரு ஆண்டு படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அன்று, வயது, 19 முதல், 30க்குள் இருக்க வேண்டும். ஊதியம், 16,020 ரூபாய். எழுத்துத்தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானது, மனித வளத்துறை நேர்முகத்தேர்வு நடத்தப்படும். விபரம் பெற, 89259 41342, 89259 41330 என்ற எண்களில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை