உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவை அருகில் பராமரிப்பு ரயில்களின் வழித்தடம் மாற்றம்

கோவை அருகில் பராமரிப்பு ரயில்களின் வழித்தடம் மாற்றம்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை:கோவை ரயில் நிலையம் அருகில், பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாளை (ஜூன் 5) கோவை வரும் திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 6) கோவை வரும் சென்னை எக்மோர்-மங்களூரு எக்ஸ்பிரஸ், நியூ டெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், நாளை மறுநாள் கோவை வரும் ஷாலிமார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா-கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ஆகியவை இருகூர், போத்தனுார் வழியே இயக்கப்படும். கோவை ரயில்நிலையம் செல்லாது. மறுமார்க்கத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை வரும் ஆழப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை போத்தனுார், இருகூர் வழியே இயக்கப்படும். கோவை ரயில் நிலையத்துக்கு இந்த ரயில்கள் செல்லாது. இதற்கு பதில் போத்தனுாரில் நின்று செல்லும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி