உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளியில் ரூ.5 லட்சம் கையாடல்: இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

பள்ளியில் ரூ.5 லட்சம் கையாடல்: இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

சேலம்:சேலம், கோட்டையில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக கிரிதரன் பணியாற்றினார். அவர் ஆசிரியர்களின் சம்பளம், ஊக்க ஊதியம், தேர்வு நிலை ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை பெற்றுத்தரும் பணியை மேற்கொள்கிறார். அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, கடந்த 1ல் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:முதுநிலை ஆசிரியர், 2 பேருக்கு தேர்வுநிலை ஊதியம் பெறுவதற்கு வழங்கப்பட்ட, அதே ஆணையில் கிரிதரன், அவரது வங்கி கணக்கை இணைத்துள்ளார். இதற்கு அவசரமாக தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்று, 5.38 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதுதொடர்பான புகாரில், துறை ரீதியான விசாரணை நடந்தது. அதில் குற்றச்சாட்டு உறுதியாக, கிரிதரன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை