உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளத்தில் கவிழ்ந்தது பள்ளி வேன் மாணவர், ஆசிரியை 18 பேர் காயம்

பள்ளத்தில் கவிழ்ந்தது பள்ளி வேன் மாணவர், ஆசிரியை 18 பேர் காயம்

ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டை பகுதியில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த வேனில், நேற்று காலை, 8:30 மணிக்கு வளையமாதேவி, ஒதியத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 45 மாணவ, மாணவியர், சில ஆசிரியைகளை ஏற்றி வந்தனர். டிரைவர் உதயகுமார், 57, என்பவர் வேனை ஓட்டி வந்தார். காலை, 9:30 மணிக்கு வளையமாதேவி கிராமத்தில் இருந்து, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த வேன், வளையமாதேவி பிரிவு சாலை பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், ஆறு மாணவியர், மூன்று ஆசிரியைகள் உட்பட, 18 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, ஆம்புலன்சில் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி கூறுகையில், “ஆத்துாரில் விபத்துக்குள்ளான தனியார் பள்ளி வேன், ஆய்வுக்கு கொண்டு வந்தபோது, இந்த வாகனத்துக்கு ஆவணங்கள் உட்பட அனைத்தும் சரியான முறையில் தான் இருந்தன. எனினும், விபத்து குறித்து, விசாரிக்கப்படுகிறது. தினமும் வாகனங்களை முழுமையாக பரிசோதனை செய்த பின், பள்ளிக்கு அதில் மாணவ, மாணவியரை அழைத்து வர வேண்டும் என, பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ