| ADDED : மே 28, 2024 07:25 AM
ஆத்துார்: தலைவாசலில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில், வைகாசி விழாவையொட்டி தேர்த்திருவிழா நடந்தது.தலைவாசல் கிராமத்தில், மகா மாரியம்மன், செல்லியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 23ல், சக்தி அழைத்தலுடன், வைகாசி திருவிழா துவங்கியது. தொடர்ந்து மாரியம்மன், செல்லியம்மன் சுவாமிகளுக்கு முளைப்பாரி ஊர்வலம், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, மகாமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஏற்றப்பட்டு, பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.தொடர்ந்து, ஓம் சக்தி..பராசக்தி.. கோஷமிட்டு மாரியம்மன் சுவாமியின் தேரின் வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். தலைவாசல், நத்தக்கரை, பட்டுத்துறை, நாவக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.