உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காமராஜர் மீது காலணி போஸ்டர் ஷூ கடைக்காரருக்கு அபராதம்

காமராஜர் மீது காலணி போஸ்டர் ஷூ கடைக்காரருக்கு அபராதம்

ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துார், காந்தி நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் காந்தி, காமராஜர், பாரதியார், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளிட்டோரின் படங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் முன்னாள் முதல்வர் காமராஜரின் படத்தை மறைத்து, தனியார் ஷூ கடை விளம்பரத்துக்கு காலணி படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் தலைமையில் அலுவலர்கள், அந்த போஸ்டர்களை நேற்று அகற்றினர். தொடர்ந்து விசாரித்ததில், ஆத்துார், கேசவேலு தெருவில் உள்ள ஷூ கடை விளம்பர போஸ்டர் என தெரிந்தது. உடனே அந்த கடைக்காரருக்கு, 3,000 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்