உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வணிகர் தின மாநாட்டால் கடை அடைப்பு

வணிகர் தின மாநாட்டால் கடை அடைப்பு

சேலம்: வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்க பேர‍மைப்பு சார்பில், 41வது மாநில மாநாடு, மதுரை, வளையங்குளத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, சேலம் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள், அவரவர் கடைகளை அடைத்துவிட்டு சென்றிருந்தனர். இதனால் செவ்வாய்ப்பேட்டை, பால்மார்க்கெட், சின்னதிருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. பிற மாவட்டங்களில் இருந்து பொருட்கள் வாங்க வந்த வியாபாரிகள், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதுகுறித்து சேலம் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பெரியசாமி கூறுகையில், ''மாவட்டத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் வணிகர்கள் குடும்பத்துடன் மாநாட்டுக்கு சென்றுள்ளோம். இதனால் மாவட்ட முழுவதும், 5,000க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. மே, 6ல்(இன்று) அனைத்து வணிக நிறுவனங்கள், வழக்கம்போல் செயல்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !