மேலும் செய்திகள்
குற்றால அருவியில் விழுந்த கல் 5 பேர் காயம்!
21-Aug-2024
சேலம், செப். 14-அரசு அருங்காட்சியம் சார்பில் நங்கவள்ளியில் வீரக்கற்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. அதில், 'வட தமிழ்நாட்டில் வீரக்கற்கள்' தலைப்பில் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர் கோவிந்தராஜ், 'சேலம் மாவட்ட கிழக்கு பகுதியில் உள்ள வீரக்கற்கள்' தலைப்பில், ஆறகளூர் பொன் வெங்கடேசன் விளக்கம் அளித்தனர். 'சேலம் மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள வீரக்கற்கள்' குறித்து சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லையரசு, கலைச்செல்வன் பேசினர். வீரக்கற்களின் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
21-Aug-2024