உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உபரிநீரை ஏரிகளில் நிரப்ப போராட்டம்

உபரிநீரை ஏரிகளில் நிரப்ப போராட்டம்

மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம், 2019 அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. தற்போது மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை, வறண்ட ஏரிகளுக்கு நிரப்பும் பணி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக, 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பக்கோரி, காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு தலைவர் வேலன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பின், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களை கருமலைக்கூடல் போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை