உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராகவேந்திரா பள்ளி மாணவர்கள் அசத்தல்

ராகவேந்திரா பள்ளி மாணவர்கள் அசத்தல்

தலைவாசல்;தலைவாசல் அருகே வீரகனுாரில் உள்ள ஸ்ரீராகவேந்திரா பள்ளி, 'ரீச் அகாடமி'யுடன் இணைந்து நடத்திய ஓராண்டு, 'நீட்' பயிற்சியால், மிருதுளா, 656 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். அதேபோல், 'ஸ்டேட்போர்டு' மாணவர்கள் பிரிவில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், 'நீட்' பயிற்சியின்றி மாவட்ட அளவில் அரசு பள்ளி, தமிழ் வழி மாணவர் பரத், 584 மதிப்பெண் பெற்று, 7.5 சதவீத பிரிவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதில், 500 மதிப்பெண்களுக்கு மேல், 17 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 'நீட்' பயிற்சியால், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு மருத்துவ கல்லுாரிகளில் இடம்பெற வாய்ப்புள்ளது.பள்ளி தலைவர் அருள்குமார், செயலர் செல்வராஜூ, பொருளாளர் பிரபா, கல்வி ஆலோசகர்கள் லஷ்மிநாராயணன், இளையப்பன், பழனிவேல், வெங்கடேசன், கல்வி குழு இயக்குனர் ராஜா, இயக்குனர் ராஜேஸ்வரி, ரீச் அகாடமி இயக்குனர்கள், பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ரீச் அகாடமிக்கும், பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி