| ADDED : மே 30, 2024 01:02 AM
சேலம், சேலம், அம்மாபேட்டை, எரவாடா தெருவை சேர்ந்த, எலக்ட்ரீஷியன் ரஞ்சித்குமார், 26. அதே பகுதியில் உள்ள அறக்கட்டளையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த, 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி அழ, அறக்கட்டளை நிர்வாகிகள் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. ஆத்திரமடைந்த அவர்கள், எலக்ட்ரீஷியனுக்கு தர்ம அடி கொடுத்து, அம்மாபேட்டை மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு மயங்கி விழுந்த அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.கட்டட தொழிலாளிசேலம், சூரமங்கலம் அடுத்த, ஜாகீர் சின்னம்மாபாளையம், வீரபாண்டியார் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி, 24. கட்டட தொழிலாளியான இவர், 15 வயது மாணவியை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி, கடந்த, 9ல் மாணவியை கடத்தி திருமணம் செய்துகொண்டு தலைமறைவானார். மாணவியின் தாய் புகார்படி, சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் ஆத்துாரில் இருந்த அழகர்சாமியை, நேற்று 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்து, மாணவியை மீட்டனர். பின் காப்பகத்தில் மாணவி ஒப்படைக்கப்பட்டார்.