உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலர் கண்காட்சியில் வாடிய பூக்களை கண்டு செல்லும் சுற்றுலா பயணிகள்

மலர் கண்காட்சியில் வாடிய பூக்களை கண்டு செல்லும் சுற்றுலா பயணிகள்

ஏற்காடு: ஏற்காடு, 47வது மலர் கண்காட்சி மேலும் நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், வாடிய பூக்களை கண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 47 வது கோடை விழா, மலர் கண்காட்சி கடந்த, 22ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்நிலையில் கண்காட்சி வரும், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி நீட்டிக்கப்படும்போது, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உருவங்களில் உள்ள வாடி போன மலர்களை மாற்றி வைப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு, அண்ணா பூங்காவில் உள்ள வாடிய மலர்களை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளனர். கண்காட்சிக்கு பணம் கொடுத்து செல்லும் சுற்றுலா பயணிகள், வாடிய பூக்களை கண்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.தோட்டக்கலை துறையினர், மலர் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பூக்களில், வாடியவற்றை மாற்றிவிட்டு, புதிய பூக்களை வைக்க வேண்டும் என, மலர் கண்காட்சிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ