உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒன்றிய குழு தலைவியானார் சேலம் எஸ்.எஸ்.ஐ., மனைவி

ஒன்றிய குழு தலைவியானார் சேலம் எஸ்.எஸ்.ஐ., மனைவி

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில், 11 வார்டுகள் உள்ளன. 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,வில், தலா, 5 கவுன்சிலர்களும், சுயேச்சையாக ஒருவரும் வெற்றி பெற்றனர். சுயேச்சை ஆதரவில், அ.தி.மு.க., கவுன்சிலரான, நாகியம்பட்டியை சேர்ந்த பிரியா, ஒன்றிய குழு தலைவியாக தேர்வானார். தி.மு.க., ஆட்சிக்கு பின், பிரியா, அக்கட்சியில் இணைந்தார்.ஆனால் அவர் மீது தி.மு.க., கவுன்சிலர்கள் முறைகேடு புகார்களை தெரிவித்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். 2023 டிசம்பரில் நடந்த ஓட்டெடுப்பில், ஒன்பது கவுன்சிலர்கள் பிரியாவுக்கு எதிராக ஓட்டு போட்டனர். கடந்த பிப்., 16ல், தலைவி பதவியில் இருந்து அவரை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று காலை, தலைவி பதவி தேர்வு கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சங்கமித்ரா தலைமை வகித்தார். இப்பதவிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, 8வது வார்டு கவுன்சிலர் கோமதி, 40, மனு செய்தார். வேறு யாரும் மனு செய்யாததால், காலை, 11:00 மணிக்கு, போட்டியின்றி கோமதி தேர்வு செய்யப்பட்டதாக, சங்கமித்ரா அறிவித்தார்.தலைவியாக தேர்வு செய்யப்பட்ட கோமதியின் கணவர் ராமச்சந்திரன், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணி புரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை