உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., கவுன்சிலருக்கு வலை

தி.மு.க., கவுன்சிலருக்கு வலை

சேலம்:சேலம், தாதகாப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம், 62. அ.தி.மு.க.,வில், கொண்டலாம்பட்டி பகுதி செயலராக இருந்தார்.கடந்த, 3ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 55வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமி, அவரது கணவர் சதீஷ்குமார் உட்பட, 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சதீஷ்குமார் உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.கவுன்சிலர் தனலட்சுமி, தாதகாப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அஜித், மகேஷ்வரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை