உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தகனமேடை சோதனை ஓட்டத்துக்கு யார் உடலை வைப்பது?: கவுன்சிலர் கேள்வியால் கலகல

தகனமேடை சோதனை ஓட்டத்துக்கு யார் உடலை வைப்பது?: கவுன்சிலர் கேள்வியால் கலகல

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:அ.தி.மு.க., கவுன்சிலர் சரண்யா: ஒன்றரை ஆண்டுகளாக கொசு மருந்து அடிக்காததால், கொசுக்கடியில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரகாஷ், கணபதி: இதற்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.கமிஷனர் சையதுமுஸ்தபாகமால்: கொசு மருந்து இயந்திரம் பழுதானதாக, சுகாதார அலுவலர்கள் கூறினர். விரைவில் சரிசெய்து கொசு மருந்து அடிக்கப்படும்.தி.மு.க., கவுன்சிலர் செல்வக்குமார்: இறந்தவர்களுக்கு வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதி, ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ளது.சையதுமுஸ்தபாகமால்: நகராட்சி பொது நிதி போதிய அளவில் இல்லாததால் தொழில், சொத்து, குடிநீர் வரி வசூல் செய்ய வேண்டும். ஈமச்சடங்கு நிதி கேட்டு தபால் அனுப்பப்பட்டுள்ளது. வரி இனங்கள் வசூல் செய்தால் பொது நிதியில் இருந்து ஈமச்சடங்கு நிதி வழங்கப்படும்.தி.மு.க., கவுன்சிலர் ஜோதி: நரசிங்கபுரத்தில், 1.40 கோடி ரூபாயில் எரிவாயு தகன மேடை பணி முடிந்த நிலையில் திறக்கப்படாமல் உள்ளது. சையதுமுஸ்தபாகமால்: சோதனை ஓட்டப்பணி மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணி முடிந்ததும் திறக்கப்படும். ஜோதி: சோதனை ஓட்டம் எனில் யார் உடலை வைத்து சோதிப்பது?(கவுன்சிலர்கள் அனைவரும் சிரித்தனர்).சையதுமுஸ்தபாகமால்: போலீசாரிடம் தெரிவித்து அனாதை உடலை பெற்று வந்து, எவ்வளவு நேரம் எரியூட்டப்படுகிறது, இயந்திர செயல்பாடு உள்ளிட்ட சோதனை பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

கமிஷனருக்கு காத்திருப்பு

கவுன்சிலர் கூட்டம் மாலை, 4:00 மணிக்கு நடக்கும் என அறிவித்திருந்த நிலையில், தலைவர் உள்பட, 18 கவுன்சிலர்கள் வந்தனர். ஆனால் கமிஷனர் (பொ) சையதுமுஸ்தபாகமால், மாலை, 5:00 மணியளவில் கூட்டத்திற்கு வந்தார். இதனால், ஒரு மணி நேரம் தலைவர், கவுன்சிலர்கள் காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை