உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண்களால் இயங்கும் சுதர்சனா ஸ்கேன் சென்டர்

பெண்களால் இயங்கும் சுதர்சனா ஸ்கேன் சென்டர்

சேலம், சேலம், ஸ்வர்ணபுரியில், 'சுதர்சனா ஸ்கேன் சென்டர்', நிறுவனர் புவனேஸ்வரி தலைமையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் நலன் காக்க பெண்களால் செயல்பட்டு வருகிறது. நிறுவனருக்கு உறுதுணையாக மருத்துவர் தீபா, ஆர்த்தி, ஷர்மிளா பானு, கிருத்திகா, மீனாட்சி பைரவி கண்ணன் உள்ளனர். அத்துடன் அனுபவமிக்க பெண் ஊழியர்கள், மருத்துவமனையில் உதவி புரிகின்றனர்.அங்கு கரு வளர்ச்சி சீராக உள்ளதா என அறிய, தாய், சேய் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ள, ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. கருவுற்ற, 3 மாதங்களில் என்.டி.ஸ்கேன், 5ல் இருந்து, 6வது மாதம் பிறவி குறைபாடு கண்டறியும் ஸ்கேன், 7வது மாதத்தில் வளர்ச்சி ஸ்கேன், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்த ஓட்டத்தை அறிய ஓ.பி.டாப்ளர் ஸ்கேன் செய்யப்படுவதோடு தகுந்த ஆலோசனை வழங்கப்படுகிறது.மார்பக பரிசோதனை, அதன் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவுகிறது. அப்படி கண்டறிவதன் மூலம் மார்பக புற்றுநோய் இருந்தால் சரிசெய்து விடலாம். இதற்கு, 'மெமோகிராமி' பரிசோதனை செய்யப்படுகிறது. மார்பகத்துக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஆரம்ப கால கட்டத்தில், பெண்கள் இங்குள்ள மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து கொண்டால் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என, ஸ்கேன் சென்டர் மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ