உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 10 வாகனங்கள் ரூ.65 ஆயிரத்துக்கு ஏலம்

10 வாகனங்கள் ரூ.65 ஆயிரத்துக்கு ஏலம்

10 வாகனங்கள்ரூ.65 ஆயிரத்துக்கு ஏலம்சேலம், அக். 19- சேலம் மாவட்டத்தில், ரேஷன் பொருட்களை கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தியபோது, 36 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம், நேற்று சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள, சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அலுவலகத்தில் நடந்தது.டி.எஸ்.பி., வடிவேல் தலைமை வகித்தார். தொடர்ந்து, 10 இரு சக்கர வாகனங்கள், 65 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. 26 வாகனங்கள் ஏலம் போகவில்லை. மீதமுள்ள வாகனங்களை விரைவில் ஏலம் விட, நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துணை தாசில்தார் கீதாராணி, இன்ஸ்பெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை