/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் விலகிய 100 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் விலகிய 100 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ஆத்துார், தி.மு.க., உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, ஆத்துார் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் நடந்தது. அதில் கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த, தி.மு.க.,வின், மாவட்ட முன்னாள் பிரதிநிதி ஜெயவேல், வார்டு முன்னாள் பிரதிநிதிகள் ராமலிங்கம், சந்திரசேகர் உள்ளிட்ட தி.மு.க.,வினர் உள்பட, 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தனர். அவர்களிடம், அ.தி.மு.க., உறுப்பினர் படிவம், கட்சி வேட்டி வழங்கப்பட்டன. ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.