மேலும் செய்திகள்
6,454 ஆஞ்சநேயர் சிலை வடிவமைத்த சிற்பி பிரகாஷ்
15-Dec-2024
சங்ககிரி: கார்த்திகை தீப திருநாளையொட்டி, சங்ககிரி, வி.என்.பாளை-யத்தில் உள்ள வசந்த வல்லபராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. வசந்தவல்லி உடனமர் வசந்த வல்லப-ராஜ பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள், வல்லபராஜ பெருமாள், மலையில் உள்ள வரதராஜர், மலை மீதுள்ள சென்னகேசவ பெருமாள் ஆகிய சுவாமிகளின் உற்சவ-மூர்த்திகளுக்கும், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்-டன. பின் உற்சவமூர்த்தி சுவாமிகள், தபால் ஆஞ்சநேயருக்கு அருகே உள்ள மண்டபத்துக்கு எழுந்தருளச்செய்தனர். அங்கு சுவாமிகளை சுற்றி, சகஸ்ர தீப அலங்காரமாக, 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடந்தது. பக்தர்கள், பெருமாள் பாடல்கள் பாடி வழிபட்டனர். அதேபோல் இடைப்பாடி, தாவாந்தெரு காளியம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் வழிபட்-டனர்.
15-Dec-2024