உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 110 விதியின் கீழ் அகவிலைப்படிஉயர்வு அறிவிக்க வலியுறுத்தல்

110 விதியின் கீழ் அகவிலைப்படிஉயர்வு அறிவிக்க வலியுறுத்தல்

110 விதியின் கீழ் அகவிலைப்படிஉயர்வு அறிவிக்க வலியுறுத்தல்சேலம்:சேலத்தில், அரசு போக்கு வரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்க மண்டல சிறப்பு கூட்டம், நேற்று நடந்தது. மாநில தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் லோகநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.கூட்டத்தில், 2025-26 பட்ஜெட்டில், போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நிதியில், ஓய்வூதியர்களுக்கு, 113 மாதமாக நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை, நிலுவையுடன் வழங்குவதற்கான தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2013, 16,19ம் ஆண்டு ஊதிய ஒப்பந்த பண பலன்களை, ஓய்வூதியத்தில் இணைத்து வழங்குதல். 2023, ஜூலைக்கு பின் ஓய்வுபெற்ற தொழிலாளர் அனைவருக்கும் ஓய்வுகால பண பலன்களை வழங்க வேண்டும். 2009 ஓய்வூதிய சீராய்வு குழுவின் அறிக்கைபடி, ஓய்வூதியத்தை அரசு ஏற்று வழங்க வேண்டும்.தேர்தல் வாக்குறுதிபடி, அகவிலைப்படி உயர்வை, 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில், ஓய்வூதியர் நலச்சங்கங்களுடன் ஒருங்கிணைந்து மிகப்பெரிய கூட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் பேச்சியப்பன், மண்டல தலைவர் தேவதாஸ், செயலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை