உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் 144 மி.மீ., மழை; அணை திறப்பால் அதிர்ச்சி

ஏற்காட்டில் 144 மி.மீ., மழை; அணை திறப்பால் அதிர்ச்சி

சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், ஏற்-காட்டில் அதிகபட்சமாக, 144 மி.மீ., மழை பதிவானது.வங்க கடலில் உருவான புயலால், சேலம் மாநகர், மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக நேற்று அதிகாலை முதல் மிதமானது முதல், கனமழை பெய்தபடியே இருந்தது. இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவ-லக சாலை, 4 ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் சென்றன. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து பெய்த மழையால், மக்கள் வீடுகளில் முடங்கினர். ஏற்காட்டில் அதிகபட்சமாக, 144.4 மி.மீ., மழை பதிவானது.அதேபோல் ஆத்துார், 92, வீரகனுார், 83, தம்மம்பட்டி, 66, ஏத்-தாப்பூர், 62, கரியகோவில், 60, வாழப்பாடி, 59.2, அணைமடுவு, கெங்கவல்லி தலா, 58, சேலம், 46.2, நத்தக்கரை, 37, டேனிஷ்-பேட்டை, 32, ஓமலுார், 14, சங்ககிரி, 11.3, மேட்டூர், 8.2, இடைப்-பாடி, 8 மி.மீ., என, மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை