மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வில் பலர் ஐக்கியம்
21-Dec-2024
அ.தி.மு.க.,வில்150 பேர் ஐக்கியம்சேலம், டிச. 27-அரூர் தொகுதி, நா.த.க., தலைவர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், அதே தொகுதி யில், பா.ஜ.,வின், பாலக்கோடு மேற்கு ஒன்றிய தலைவர் சேட்டு, தர்மபுரி மாவட்ட மகளிரணி செயலர் வள்ளி உள்பட, நா.த., பா.ஜ., பா.ம.க.,வில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் விலகினர். அவர்கள், முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஏற்பாட்டில், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள, பொதுச்செயலர், இ.பி.எஸ்., வீட்டில் நேற்று நடந்தது. அங்கு, இ.பி.எஸ்., முன்னிலையில், அனைவரும், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.அதேபோல், அ.தி.மு.க.,வின், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலர் ரத்தினசாமி ஏற்பாட்டில், பூதலுார் ஒன்றிய, தி.மு.க., அமைப்பாளர் ஜோதி மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், அ.ம.மு.க., - இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த, 50 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அனைவருக்கும், கட்சி துண்டு அணிவித்து, இ.பி.எஸ்., வரவேற்றார்.
21-Dec-2024