மேலும் செய்திகள்
இரண்டு பைக் திருட்டுவாலிபர் அதிரடி கைது
18-Apr-2025
சேலம், சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன், 25. அதே பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்துகிறார். சில நாட்களுக்கு முன், அப் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.அப்போது பொன்னம்மாபேட்டையை சேர்ந்த முரளி, 20, அய்யனார் 21, ஆகியோர், சில்லி சிக்கன் கடை முன் ஆட்டம் போட்டனர். இதில் அவர்களுக்கும், ஹரிஹரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் கடைக்கு வந்த இருவரும், ஹரிஹரனிடம் தகராறில் ஈடுபட்டனர்.பின் ஹரிஹரனை, சாலையில் இழுத்து வந்து தாக்கியதோடு, கத்தியால் சரமாரியாக குத்தினர். மக்கள் தகவல்படி, அம்மாபேட்டை போலீசார் வந்து, படுகாயம் அடைந்த ஹரிஹரனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அய்யனார், முரளியை, போலீசார் கைது செய்தனர்.
18-Apr-2025