மேலும் செய்திகள்
பணம் பறிப்பு இருவர் கைது
09-Oct-2025
சேலம்:வீரபாண்டி அருகே அக்கரைபாளையம், கோடங்கி நாயக்கனுாரை சேர்ந்தவர் கண்ணன். பாலம்பட்டியில் ஜோதிடம் பார்க்கிறார். நேற்று முன்தினம் மதியம், 'எக்ஸல்' மொபட்டில், பூலாவரி ஆத்துக்காட்டில் வந்து கொண்டிருந்தபோது, ஸ்கூட்டியில் வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி, கண்ணனிடம் இருந்த, 2,000 ரூபாய், மொபைல் போனை பறித்துச்சென்றனர். அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து, ஆத்துக்காட்டை சேர்ந்த சதீஷ், 25, தாதகாப்பட்டி கோபி, 24, ஆகியோரை, கைது செய்தனர்.
09-Oct-2025