உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் திருடிய 2 பேர் கைது

பைக் திருடிய 2 பேர் கைது

சேலம், டிச. 20-சேலம், தாதகாப்பட்டி திருஞானம் தெருவை சேர்ந்தவர் ராஜன் மகன் சிம்சன், 24. இவர் கடந்த, 16 இரவு தனது ேஹாண்டா பைக்கை நிறுத்திவிட்டு, வீட்டினுள் சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, பைக் திருடி சென்ற தாதகாப்பட்டி திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த கிரண்குமார், 23, வள்ளுவர் நகரை சேர்ந்த சங்கர், 20, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து பைக்கை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை