2 திவ்ய தேச பெருமாள் தத்ரூப அலங்காரம்
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதை ஒட்டி, செவ்வாய்பேட்டை கணபதி நண்பர் குழு சார்பில், குண்டு போடும் தெருவில் உள்ள கமலா மகால் மண்டபத்தில், 108 திவ்யதேச பெருமாள்களில், 48வது திவ்ய தேசமான காஞ்சிபுரம் பாண்டவ துாத பெருமாள், 69வது திவ்யதேசமான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாராயணர் பெருமாள்களை போன்று தத்ரூபமாக அலங்காரம் செய்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைத்துள்ளனர்.நேற்று காலை, 10:30 முதல் இரவு, 10:00 மணி வரையும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரு திவ்ய தேச பெருமாள்களை, இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.