2 எக்ஸ்பிரஸ் ரயில் கோவை செல்லாது
சேலம், கோவை அருகே பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், வரும், 15, 17 காலை, 7:15க்கு புறப்படும் எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ், காலை, 6:00 மணிக்கு கிளம்பும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ஆகியவை, போத்தனுார், இருகூர் ஆகிய மாற்று வழியில் இயக்கப்படும். கோவைக்கு செல்லாது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.