ரேஷன் அரிசி கடத்தல் கும்பலில் 2 பேர் சிக்கினர்; மேலும் 2 டன் பறிமுதல்
சேலம், சேலம், அம்மாபேட்டை ரோந்து போலீசார், கடந்த, 6ல் பொன்னம்மாபேட்டையில், லாரி, மினி வேனில் ரேஷன் அரிசி லோடு, கடத்தலுக்கு ஏற்றுவதை கண்டுபிடித்தனர். போலீசாரை பார்த்த கும்பல், தப்பி ஓடிவிட்டது. அங்கு, 2,750 கிலோ ரேஷன் அரிசியுடன், லாரி, வேனை பறிமுதல் செய்த போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடியது, பொன்னம்மாபேட்டையை சேர்ந்த செந்தில், ரேவதி, ரேவதி மகன் பிரவீன், டிரைவர் தமிழ்செல்வன் என தெரிந்தது. அவர்கள் மீது அரிசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இந்நிலையில் நேற்று, பொன்னம்மாபேட்டையில் இருந்த செந்தில், 49, பிரவீன், 37, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வீடு அருகே பதுக்கப்பட்டிருந்த, மேலும், 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேவதி, தமிழ்செல்வனை தேடுகின்றனர்.