உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெவ்வேறு இடங்களில் விபத்து பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு இடங்களில் விபத்து பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி

தலைவாசல்: தலைவாசல் அருகே நாவக்குறிச்சியை சேர்ந்த சின்னசாமி மகன் லோகபிரியன், 19. இவர், தம்பி அன்பரசன், 16, ஆகியோர், 'சைன்' பைக்கில் தக்காளி எடுத்துக்கொண்டு தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றனர். காலை, 11:00 மணிக்கு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிச்சென்றனர். நாவக்குறிச்சியில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில் அன்பரசன், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் சிதறி பலியானார். தலைவாசல் போலீசார், டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர். இறந்த அன்பரசன், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அதேபோல் ஆத்துார் அருகே கல்லாநத்தத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் மணிகண்டன், 32. இவர் அதே ஊரைச் சேர்ந்த பழனி, 57, ஆகியோர், 'ஸ்பிளண்டர் ப்ளஸ்' பைக்கில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு ஆத்துாரில் இருந்து புதுப்பேட்டையில் உள்ள நெல் அரவை ஆலைக்கு கூலி வேலைக்குச்சென்றனர். புதுப்பேட்டையில் சென்றபோது, 'டிவிஎஸ் - ரேடான்' பைக், மணிகண்டன் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த, மணிகண்டன், பழனி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனி நேற்று உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார், விபத்து ஏற்படுத்தியவர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ