உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேன் - பைக் மோதல் 2 இளைஞர்கள் பலி

வேன் - பைக் மோதல் 2 இளைஞர்கள் பலி

மேட்டூர்: கொளத்துார், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, கண்ணன் மகன் ஜீவா, 18. அருகே உள்ள, அண்ணா நகரை சேர்ந்த, வெங்கடேஷ் மகன் சஞ்சய்பாலா, 19. கூலித்தொழிலாளர்-களான இருவரும், நேற்று மாலை, 5:45 மணிக்கு, மேட்டூரில் இருந்து கொளத்துார் நோக்கி, 'பல்சர்' பைக்கில் சென்று கொண்டி-ருந்தனர். ஹெல்மெட் அணியாமல், ஜீவா ஓட்டினார். விராலிகாடு அருகே சென்றபோது, எதிரே, கொளத்துாரில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற வேன் மீது மோதியது. இதில் ஜீவா, சஞ்சய்பாலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !