உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதுகலை பொது கலந்தாய்வு முதல் நாளில் 280 பேர் சேர்க்கை

முதுகலை பொது கலந்தாய்வு முதல் நாளில் 280 பேர் சேர்க்கை

சேலம், சேலம் அரசு கலைக்கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், மனித உரிமைகள், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்பட, 17 முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் உள்ள, 464 இடங்களை, நடப்பு கல்வியாண்டில் நிரப்ப ஆன்லைன் மூலம், 4,415 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.முதல்கட்டமாக கடந்த 11ல், சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு நடந்தது. அதில் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பொது பிரிவினர் கலந்தாய்வு, கல்லுாரி முதல்வர் கலைச்செல்வி தலைமையில் நேற்று தொடங்கியது. 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சேர்க்கை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவியரின் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட சான்றிதழ்களை சரிபார்த்து, ஒப்புதல் அளித்த பின், முதல்வரிடம் அனுமதி கடிதம் பெற்று, சேர்க்கை நடந்தது. அதன்படி, 280 பேர் சேர்ந்தனர். மீதி காலியிடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை