உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 11 சட்டசபை தொகுதியில் 29.28 லட்சம் வாக்காளர்கள்

11 சட்டசபை தொகுதியில் 29.28 லட்சம் வாக்காளர்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில் மொத்தம், 29 லட்சத்து, 28 ஆயிரத்து, 122 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் பெண்கள், 14 லட்சத்து, 71 ஆயிரத்து, 524 பேர். அவர்களை விட எண்ணிக்கையில் ஆண்கள், 15,225 பேர் குறைவு.சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 2024க்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று காலை கலெக்டர் கார்மேகம் வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்று கொண்டனர்.ஆண் வாக்காளர், 14 லட்சத்து, 56 ஆயிரத்து, 299 பேர், பெண் வாக்காளர், 14 லட்சத்து, 71 ஆயிரத்து 524 பேர்; இதர வாக்காளர், 299 பேர் என, மொத்தம், 29 லட்சத்து, 28 ஆயிரத்து, 122 பேர் உள்ளனர். கடந்த 2023, அக்.,27ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தொடர்ந்து திருத்தம் செய்யும் பணி கடந்த, 12 வரை நடந்தது. இதற்கிடையே, நவ.,4,5,25,26ல், சனி, ஞாயிறு முறையே, 4 சிறப்பு முகாம் நடத்தி டிச., 9 வரை படிவங்கள் பெறப்பட்டது. அவை அனைத்தும், 2024, ஜன.,1ஐ, தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி மொத்தமாக, 69,546 வாக்காளர் பெயர் சேர்க்கப்பட்டது. அதில், 18 -19 வயதுக்கு உட்பட்ட புதிய வாக்காளர் 53,391 பேர் அடங்கும். தவிர நீக்கப்பட்ட வாக்காளர், 34,033 பேர். கலெக்டர் கார்மேகம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, இம்முறை ஆதாருடன், ஒவ்வொரு வாக்காளரின் முகம் ஒப்பிட்டு சரிபார்ப்பு பணி நடந்தது. அதில், பொதுவான பெயர் கொண்ட வாக்காளர் பெயர் இருமுறை பதிவாகி இருப்பது கண்டுபிடித்து, நீக்கம் செய்யப்பட்டது. அதன்படி, 100 சதவீதம் கள ஆய்வு நடந்தது. வாக்காளர் பட்டியலில் தொடர்ச்சியாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய, அந்தந்த ஓட்டுப்பதிவு மையம், தாசில்தார் அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்று, தகுந்த ஆவணத்துடன், பூர்த்தி செய்து தரலாம்.தவிர, www.nvsp.inஎன்ற இணையதள முகவரி, Voter Helpline என்கிற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வரும் எம்.பி., தேர்தலுக்கு முன்பாக கூடுதல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.ஆனால், அப்போது நீக்கம் செய்ய முடியாது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி