வாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலை
சேலம், சேலம், கோரிமேட்டை சேர்ந்தவர் அபிேஷக், 20. இவர் பல்வேறு விழாக்களுக்கு, அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, திருமண விழாவுக்கு அலங்காரம் செய்ய, பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, வீட்டில் இருந்து புறப்பட்டார். செவ்வாய்ப்பேட்டையில் வந்தபோது, அங்கு பைக்கில் வந்த, 3 பேர், அவரது வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த அபிேஷக்கை, அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செவ்வாய்ப்பேட்டை போலீசார், 3 பேரை தேடுகின்றனர்.