உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை வாங்கி மோசடி வாலிபருக்கு 3 மாத சிறை

நகை வாங்கி மோசடி வாலிபருக்கு 3 மாத சிறை

சேலம், நவ. 9-சேலம், கடை வீதியை சேர்ந்தவர் பாலாஜி, 33. இவர் கடை வீதியில், 'நரசுஸ் சாரதி ஜூவல்லரி' வைத்துள்ளார். இவரிடம் கிச்சிப்பாளையம், வேல்முருகன் நகரை சேர்ந்த விஜயபாஸ்கர், நகை வியாபாரம் செய்வதாக கூறி, 2012ல் நகைகளை கடனுக்கு வாங்கியுள்ளார். இதில், 278 கிராமுக்குரிய தொகை, 6.45 லட்சம் ரூபாயை தரவில்லை. இதுகுறித்து பாலாஜி, சேலம் ஜே.எம்.எண்: 1ல் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் வக்கீல் அய்யப்பமணி ஆஜரானார். இந்நிலையில் விஜயபாஸ்கருக்கு, 3 மாத சிறை தண்டனை, 6.45 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க, மாஜிஸ்திரேட் திருமால் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை