உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற 3 பேர் கைது

நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற 3 பேர் கைது

வாழப்பாடி : வாழப்பாடி, வெள்ளாளகுண்டத்தில் அரசுக்கு சொந்தமான, 'டிவி' அறை, மர்ம நபர்களால் பொக்லைன் மூலம் கடந்தாண்டு நவ., 27ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து அரசு நிலத்தை ஆக்கிரமிக்காமல் இருக்க, கம்பிவேலி அமைக்கப்பட்டது. அதையும் கடந்த மாதம், 14ல் மர்ம நபர்கள் உடைக்க முயன்றபோது, ஊராட்சி செயலர் சூரிய பிரகாஷ்(பொ) தடுத்தார். அதை மீறி கம்பி வேலியை உடைத்துள்ளனர். இதுகுறித்து அயோத்தியாப்பட்டணம் பி.டி.ஓ., இளங்கோ புகார்படி, வாழப்பாடி போலீசார் நேற்று வழக்கு பதிந்து, வெள்ளாளகுண்டத்தை சேர்ந்த சத்யராஜ், 30, மணிகண்டன், 34, ராஜா, 50, ஆகியோரை கைது செய்து, பொக்லைனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ