உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 மெடிக்கல் ஷாப்பில் விதிமீறல் கண்டுபிடிப்பு

3 மெடிக்கல் ஷாப்பில் விதிமீறல் கண்டுபிடிப்பு

சேலம், சேலம் மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து மேற்பார்வையில், மருந்து ஆய்வாளர்கள் குழுவினர், கடந்த செப்டம்பரில், காடையாம்பட்டி, குண்டுக்கல்லில் உள்ள வி.எம்.எஸ்., மெடிக்கல் ஷாப்பில் சோதனை நடத்தினர். அதில் மருந்தாளுனரின்றி கடையை வழிநடத்தியது, மருந்து சீட்டு பதிவேடு பராமரிப்பின்மை உள்ளிட்ட விதிமீறல் கண்டறியப்பட்டது. இதனால் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் இடைப்பாடியில் அம்மன் மெடிக்கல் ஷாப்; ஆத்துார் ராணிப்பேட்டை கடைவீதியில் உள்ள கார்த்திக் மெடிக்கல் ஷாப்பில் நடந்த ஆய்வில், ரசீது இல்லாமல் விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அந்த கடைகளுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பி, அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை