நா.த.க.,வினர் 30 பேர் கைது
நா.த.க.,வினர்30 பேர் கைதுசேலம், அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரம் தொடர்பாக, தி.மு.க., அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். இதை கண்டித்து நா.த.க., சேலம் மாவட்ட தலைவர் இமேஸ்வரன் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், 30 பேரை போலீசார் கைது செய்தனர்.