உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திரவுபதி கோவிலில் 3,000 பெண்கள் பால்குட ஊர்வலம்

திரவுபதி கோவிலில் 3,000 பெண்கள் பால்குட ஊர்வலம்

ஆத்துார் :ஆத்துார், தாயுமானவர் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி பால் குட ஊர்வலம் நேற்று நடந்தது. அதில், 3,000க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடங்களை சுமந்து, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்றனர். பின் மூலவர் அம்மன் மீது பாலை ஊற்றி அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து மூலவர் அம்மன், 'அபிராமி அம்மன்' அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை