உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 320 கிலோ புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது

320 கிலோ புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது

சேலம், நவ. 9-சேலம், மேத்தா நகரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார், இருசாகவுண்டர், 56, என்பவர் வீட்டில் நடத்திய சோதனையில், 320 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு, 3.55 லட்சம் ரூபாய். பெங்களூருவில் இருந்து மொத்தமாக கடத்திவந்து, சேலத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பது தெரிந்தது. அப்போது ஜாகீர்அம்மாபாளையம், மில்லத் நகரை சேர்ந்த சிறு வியாபாரி ஜாபர்சாதிக், 42, புகையிலை வாங்க வந்து சிக்கிக்கொண்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக இருசாகவுண்டர் வீட்டில் ஒரு ஆட்டோ, 'டிஸ்கவர்' பைக், சிறு வியாபாரியின் எக்ஸ்.எல்., 100 மொபட் ஆகிய வாகனங்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை