உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் சுற்றுப்பகுதியில் 37 மி.மீ., மழைப்பொழிவு

மேட்டூர் சுற்றுப்பகுதியில் 37 மி.மீ., மழைப்பொழிவு

மேட்டூர், மேட்டூர் சுற்றுப்பகுதியில் கடந்த, 17ல், 0.8 மி.மீ., மழை பெய்தது. தொடர்ந்து சில நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டபோதும் மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் இரவு, மேட்டூரிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. ஒரே இரவில், 37.4 மி.மீ., மழை பெய்தது. சில இடங்களில் சாலையோரம் வைத்திருந்த கட்சி பேனர்கள் சேதமாகின. தற்காலிக கடைகளின் மேற்கூரை சாய்ந்தது. நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு, 7:30 மணிக்கு மழை பெய்தது. இரு நாட்களாக பெய்த மழையால் மேட்டூர் சுற்றுப்பகுதி விளைநிலங்களில் ஈரப்பதம் அதிகரித்தது, விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ