உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க.,வில் 400 பேர் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் 400 பேர் ஐக்கியம்

ஓமலுார்: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்டம் மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய செயலர் மணிகண்டன் ஏற்பாட்டில், மாற்று கட்சிகளில் இருந்து விலகிய, 400 பேர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, ஓமலுார் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அங்கு, பொதுச்செயலர் இ.பி.எஸ்., முன்னிலையில், 400 பேரும் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்று, இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்தார். ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய செயலர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !