உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொப்பரை வரத்து 4,000 கிலோ அதிகம்

கொப்பரை வரத்து 4,000 கிலோ அதிகம்

வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 10,323 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். இது, கடந்த வாரத்தை விட, 4,000 கிலோ அதிகம். கொப்பரை கிலோ, 63 முதல், 92.05 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 8.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார். கடந்த வாரம் ஒரு கிலோ கொப்பரை, 64 முதல், 92.90 ரூபாய் வரை விலைபோனது. இந்த வாரமும் விலையில் பெரிய மாற்றம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ