உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 43 கிலோ வெள்ளி; ரூ.90,000 திருட்டு

43 கிலோ வெள்ளி; ரூ.90,000 திருட்டு

சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை, கிழக்கு ரயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 40. அதே பகுதியில் உள்ள மல்லிசெட்டி தெருவை சேர்ந்தவர் நடராஜன், 48. இருவரும் அதே பகுதியில் உள்ள குப்பு செட்டி தெருவில், வீட்டை வாடகைக்கு எடுத்து வெள்ளி பட்டறை நடத்துகின்றனர். நேற்று முன்தினம் இரவு, பட்டறையை பூட்டிச்சென்றனர்.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கணேசன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டறை பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்து கணேசன், உள்ளே சென்று பார்த்தபோது, 3.750 கிலோ வெள்ளி, 40 கிலோ மட்ட வெள்ளி, 90,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது.இதுகுறித்து கணேசன் புகார்படி, அம்மாபேட்டை உதவி கமிஷனர் செல்வம் உள்ளிட்ட போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை