உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 45 சவரன், ரூ.3.50 லட்சம் விவசாயி வீட்டில் திருட்டு

45 சவரன், ரூ.3.50 லட்சம் விவசாயி வீட்டில் திருட்டு

ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் உப்பு ஓடை, வடக்குகாட்டை சேர்ந்த விவசாயி பழனிவேல், 53; மனைவி இறந்துவிட்டதால், தனியாக இருந்த பழனிவேல், 26 நாட்களாக வீட்டை பூட்டிவிட்டு, தோட்டத்து வீட்டில் துாங்கி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் தோட்டத்து வீட்டுக்கு சென்றவர், நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்தார்.டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். பீரோவில் வைத்திருந்த, 45 சவரன் நகை, 3.50 லட்சம் ரூபாய், 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. வீட்டின் வெளிப்புறம், உட்புறம் இருந்த 'சிசிடிவி' கேமராக்களும் உடைக்கப்பட்டிருந்தன. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை